Friday, December 24, 2010

புரிதல்



பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை
நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்
காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்
வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்
எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!
- பா.கிருஷ்ணன்
(vikatan, 29, Dec)

Tuesday, December 21, 2010

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும்போது
ஒண் தமிழே நீ சலசலத்து ஓட வேண்டும்
 - Eela kavignyan

Sunday, December 12, 2010

கோப்பை முழுதும் மழை


உனக்கு நிறைய
கேள்விகள் இருந்தன
நிறைய சமாளிப்புகள்
நிறையக் குற்றச்சாட்டுகள்
நிறையக் கோபங்கள்
நீ கை அசைத்துப் போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது!

vikatan(15 Dec)
http://new.vikatan.com/article.php?aid=461&sid=15&mid=1

Monday, November 15, 2010

ஆடை அணிந்து நீ என் அம்மணத்தை கேலி செய்கிறாய்..
உன் ஆடையே உன் அம்மணத்தின் கேலிதான்..
- பத்மஸ்ரீ கமல்ஹாசன்

Monday, October 18, 2010

பரத்தை கூற்று

“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”
 

 “எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”
- பரத்தை கூற்று,  சி.சரவணக்கார்த்திகேயன்

Sunday, October 10, 2010

கனவில் மின்னியது
அன்பின்
சொல் ஒன்று
 http://raajaachandrasekar.blogspot.com/2010/09/blog-post_25.html

எழுதாத தாளில்
விரிகிறது
வானம்

http://raajaachandrasekar.blogspot.com/2010/10/blog-post_07.html

Tuesday, October 5, 2010

உலகோச்சினான் முப்பாட்டன்..
நாடு நகரென நலிந்து தேய்ந்து
எட்டாந் தலைமுறையில் எடுபிடியாக நான்!
- யுகபாரதி

Saturday, October 2, 2010

எங்கே இருக்கிறது குதிரைக் குட்டி?


மகனின் கையெழுத்துக்களை நேர்த்தியாக்கும் முயற்சியில்
அந்த விளையாட்டைத் துவங்கினேன்.
ஒ-வைச் சரியாக எழுதினால்
யானை முகம் தெரியும்.
ஃ-ல் வைக்கலாம் பொங்கல் பானையை என்றதும்
பற்றிக்கொண்டது கற்பூரம்.
உயிரெழுத்துக்கள் மெய்யாகவே
உருவங்களாய் உயிர்த்தன
கழியில் கட்டப்பட்டு இருந்த அன்னம் கழுத்தைச் சொறிகிறது அகரத்தில்
பத்மாசனத்தைப் பயிற்சி செய்கிறது
இரவின் முதல் எழுத்து
தாய்க் குதிரை ஏணியின் கடையெழுத்து
தேனியின் பிற்பகுதியில் நிற்கிறது
அதன் செல்லக்குட்டி
உகரம் நாகம்தான் என்பதை ஆட்சேபித்தவன்
அதனை லாரி மாதிரி இருக்கிறது என்றான்
ஊ-தண்ணீர் லாரியாம்
'போ' - நன்றாய்ப் பாருங்கள் தொலைபேசியின் ஒலி வாங்கியைக் கீழே வைத்திருக்கிறார்கள்
ந-காகம், த-புறா
தீயும் நீயும் கொண்டைக் கிளிகளாகிப் பறந்துவிட
மகரம் கப்பலாகிமிதக்கத் துவங்கும்முன்
ழகரம் தன் கத்தியால்
நீரைக் கிழித்து விரைகிறது
புழுக்களென நெளியும் லகரங்களை விட்டு விலகி மேய்ச்சலைத் தொடரும் ளகர ஜாதி ஆடுகள்
நித்திய கல்யாணியாகத் தெருவெங்கும் மலர்ந்திருக்கிறது 'ஐ'ப்பூக்கள்
திலகம்வைத்து அலங்காரமாக நிற்கின்றனர் மெய்யெழுத்துப் பெண்கள்!
- இளையநிலா ஜான்சுந்தர்
(Vikatan - Sep 22, 2010)

Monday, August 9, 2010

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
...கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
- :)

Sunday, August 8, 2010

இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'

அதுபோன்ற அன்பால்
என்ன நேர்கிறதென்று பாருங்கள்.
அது முழு ஆகாயத்தையும் சுடரச்செய்கிறது.

- Hafeez


http://vaalnilam.blogspot.com/2010/07/blog-post.html

Saturday, August 7, 2010

ஈடு

வயிற்றில்
வாங்கிக் கொள்ளவியலுமா
அம்மாவை - இறப்பை இறப்பால்
ஈடுசெய்ய நிகழுமா- அன்பிற்கு ஈடாகாது
அன்பும்
 - By Brinda
( http://vaalnilam.blogspot.com/2010_01_01_archive.html )

Saturday, July 31, 2010

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றைமரத்தின் ஒரே இலை விழுகிறது.
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை.
விழுந்துகொண்டிருக்கிறது

- thiru.பெருந்தேவி

http://www.kalachuvadu.com/issue-127/page42.asp

Wednesday, June 30, 2010

ஆண்கள் அறிக...

காதல் சொல்லும் கணத்தில்கூட
முதல் காதலிக்கான கவிதை
வாசிக்கப்படுகிறது. கல்யாணத்துக்கு நெருக்கும்
பழுத்த காதலிகளிடம்
இன்னும் வயதுக்கு வராத
உங்கள் தங்கையின்
திருமணத்தைப்பற்றிப் பதறுகிறீர்கள்...
உங்களை நம்பி ஓடி வந்து
மாலை மாற்றிக்கொண்டவளிடம்
'என் அம்மாவைவிட்டு
வந்துவிட்டேனே' என்று
புலம்புகிறீர்கள்...
அடுப்படியில் வெந்து விறுவிறுக்க
மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை
உறிஞ்சிக்கொண்டே,
'என் அம்மா வைத்தால்
ஊரே மணக்கும்' என்கிறீர்கள்...
'என் மனைவிக்கு மிகவும் பிடித்தது
மல்லிகைப் பூ' என்று
கைம்பெண்ணிடம் பூ வாங்கும்போது
முணுமுணுக்கிறீர்கள்...
வாழ்வின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டு இருப்பவளிடம்
எப்படி உங்கள் பெண் குழந்தைகள்
தேவதைகளாக இருந்து
உங்களைக் காக்கிறார்கள்
என்று வியக்கிறீர்கள்...
மரணப் படுக்கையில் இருப்பவளிடம்
உங்கள் மனைவி பிரசவத்தில்
பிழைத்த கதையையும்
விபத்தில் சிக்கியவளிடம் உங்கள்
குருதிக் கொடையால் கண் விழித்த
கல்லூரிப் பெண்கள்பற்றியும்
விவரிக்கிறீர்கள்...
பிள்ளையற்றவளிடம் உங்கள்
பாட்டி பெற்ற பதினாறைப்
பட்டியலிடுகிறீர்கள்...
நாட்டியக்காரியின் வீட்டை
நாடி வந்துவிட்டு
அவள் காலை நக்கிக்கொண்டே
உங்கள் வீட்டுக் 'குத்து விளக்கை' எண்ணிக்
கண்ணீர் உகுக்கிறீர்கள்...
காதலோடு நீங்கள் பேச ஆரம்பிக்கும்
ஒரு பொழுதேனும் இடைமறித்து
'அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து
மகேந்திரன் கொடுத்த முத்தத்துக்கு
ஈடாகாது எதுவும்' என்று
சொல்ல வேண்டும்.
கண்ணகிகளை மாதவியாக்கும்போது
நீங்கள் நகுலன் அல்லது
சகாதேவனாகிறீர்கள்.
இடம் பொருள் ஏவலற்றுப்
பிற பெண்களைப்பற்றிப் பேசும்
ஆண்கள் அறிக,
உங்களுக்கான முத்தம்
வேறொரு உதட்டில்
இடப்பட்டுவிட்டது!
- By Thaamarai (Vikatan, june 2010)

Friday, May 14, 2010

ஏன் இப்படி..

வளர்ச்சியின் உச்சகட்ட படியில் நின்றுகொண்டு
கீழ்நோக்கி பார்த்து
நகைக்கிறான் மனிதன்...
யாருக்கு தெரியும்?
எளிமையின் உச்சகட்டத்திளிருந்துகொண்டு 
அமீபா(amebae ) நகைத்துக்கொண்டிருக்கலாம்..

By: Kavi. Thaamarai
source:  http://www.youtube.com/watch?v=-bVhJU2So40

Wednesday, May 5, 2010

raajaachandrasekar.blogspot.com

பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்
src:
http://raajaachandrasekar.blogspot.com/2010/04/blog-post_22.html

புல்லாங்குழலில் விழுந்த எறும்பை
எடுத்துப் போட்டேன்
இசையில் விழுந்த எறும்பை
முடியவில்லை 
src: http://raajaachandrasekar.blogspot.com/2010/05/blog-post_5101.html

Sunday, May 2, 2010

மலையாள மொழிபெயர்ப்பு கவிதைகள் - http://www.kalachuvadu.com/issue-124/page39.asp

Source: Kaalachuvadu.com